சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

பெண்கள் வலுவூட்டல்

SWOAD அமைப்பு கிராமங்களில் 36 விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தியது.

கிராம மட்டத்தில் துரைசார் நிபுணர்களை அழைத்து அவர்களினால் வழங்கப்படும் சேவைகள் குறித்தும், அவற்றை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் குறித்தும் விப்புணர்வுகருத்தரங்குகள் சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனூடாக கிராம மட்டங்களில் அடையாளம் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு இலகுவில் துறைசார் உத்தியோகத்தர்களை அணுகி தீர்வுகாண்பதற்கும், அவர்களுடனான சிறந்த தொடர்பை ஏற்படுத்திகொள்ளக்கூடியதற்குமான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அமைப்பின் செயற்பாட்டு பிரதேசங்களான 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ்வருடம் 36 விழிப்புணர்வு கருந்தரங்குகள் நடாத்தப்பட்டுள்ளதுடன் இதில்…
மேலும் படிக்க

SWOAD 2019 இல் 3,335 கிளைகள் மற்றும் 72 பிரதேச கூட்டங்களை நடத்தியது.

அங்கத்தவரது குடும்ப முன்னேற்றத்திற்கும், கிராம, சமூக,பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும் வகையில் மாதம் ஒரு தடவை 53 கிளைகளிலும் கிளை நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்களும், 6 பிரதேசங்களிலும் பிரதேச நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டு கிளை, பிரதேச ரீதியான செயல் முன்னேற்றங்கள் குறித்தும், சவால்கள், பொதுத் தேவை, பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டு அவற்றுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இவ்வருடம் 23,106 அங்கத்தவர்கள் பங்குபற ;றுதலுடன் 3,335 கிளைக்கூட்டங்களும்,2,408 பிரதேச நிர்வாகிகளின்…
மேலும் படிக்க

கிராமங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு தெரு நாடகம்.

EU-ACAP திட்டத்தின் கீழ் தாண்டியடி, சிறிவல்லிபுரம், விநாயகபுரம், குடிநிலம் ஆகிய கிராமங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வூட்டும் பொருட்டு வீதி நாடகம் நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

காவல்துறை மகளிர் மேசை அடிக்கல் நாட்டு விழா மற்றும் விநாயகபுரம் கல்வெட்டு நிகழ்வு

EU-ACAP திட்டத்தின் கீழ் 17.10.2012ம் திகதி திருக்கோவில் பொலிஸ் Women desk அடிக்கல் நாட்டல் நிகழ்வும், வினாயகபுரம் கல்வெட்டு திறப்புவிழாவும் நடைபெற்றது.
மேலும் படிக்க

இனக்குழுக்களிடையே ஒற்றுமைக்குள் கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்

மூவின மக்களிடையே சமாதான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் நாவிதன்வெளிப் பிரதேச 4ம் கிராம வாணி மகா வித்தியாலயத்தில் 2009.12.26 திகதி மூவின மக்களையும் உள்ளிணைத்து கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டது
மேலும் படிக்க

அனர்த்த அபாயத்தணிப்பு செயற்திட்டத்தின் 450 அனகியடுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

அனர்த்த அபாயத்தணிப்பு செயற்திட்டத்தின் கீழ் பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி அகிய 6 பிரதேசங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 450 பயனாளிகளுக்கு 152,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 450 அனகியடுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

இரணைமடு மகாவித்தியாலயத்தில் சர்வதேச மகளிர் தின விழா

சர்வதேச மகளீர்தின நிகழ்வானது நாவிதன்வெளிப் பிரதேச ராணமடு மகாவித்தியாலயத்தில் 2009.03.29ம் திகதி நிர்வாகப்பணிப்பாளர் திரு.வ.பரமசிங்கம் அவர்களின் தலைமையில் நடாத ;தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச தவிசாளர் திரு. T .கலையரசன் அவர்களும், 12ம் கிராம பாடசாலை அதிபர் திரு. A.M யுசிப் அவர்களும், RDS k..அமுர்தலிங்கம் அவர்களும், சமாதான நீதவான் யு.ஆறுமுகம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின்போது சமூகத்தில் முன்னோடிப் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்
மேலும் படிக்க

81 இளம் பெண்களுக்கு தையல் தொழில் தொடங்குவதற்கு வசதியாக கடன் வழங்கப்பட்டது

2006ம் ஆண்டு வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கோமாரி, விநாயகபுரம், வளத்தாப்பிட்டி ஆகிய கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 81 யுவதிகளை உள்ளிணைத்து தையல் கூடம் அமைக்கப்பட்டு தொழிலுக்கான தையல் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கடனுதவியாக 800,000.00 ரூபாய் சுவாட் அமைப்பினால் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

திருக்கோவிலில் சர்வதேச மகளிர் தின விழா

திருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச மகளீர் தினம் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் 2006.03.12 ம் திகதி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் 700 – 800 அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். அத்தோடு குழுத்தலைவிகளும், அதிக சேமிப்புள்ள அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க