சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

சமூக நல்லணக்கம்

ஆலையடிவேம்பு விவசாயிகளுடனான கலந்துரையாடல்

SWOAD நிறுவனமானது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதனை உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 21.01.2024ம் திகதி சுவாட் நிறுவனத்தின் அக்கரைப்பற்றில் உள்ள தலைமையலுவலகத்தில் அந்நிறுவனத்தின் ஸ்தாபகரும். இணைப்பாளருமான திரு.எஸ்.செந்துராசா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது இதன்படி இக்கூட்டத்தில் தற்போது விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. மேலும் இக்கலந்துரையாடலுக்கு விவசாய அமைப்புக்களின் தலைவர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் சுவாட்…
மேலும் படிக்க

SWOAD 2019 இல் 3,335 கிளைகள் மற்றும் 72 பிரதேச கூட்டங்களை நடத்தியது.

அங்கத்தவரது குடும்ப முன்னேற்றத்திற்கும், கிராம, சமூக,பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும் வகையில் மாதம் ஒரு தடவை 53 கிளைகளிலும் கிளை நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்களும், 6 பிரதேசங்களிலும் பிரதேச நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டு கிளை, பிரதேச ரீதியான செயல் முன்னேற்றங்கள் குறித்தும், சவால்கள், பொதுத் தேவை, பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டு அவற்றுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இவ்வருடம் 23,106 அங்கத்தவர்கள் பங்குபற ;றுதலுடன் 3,335 கிளைக்கூட்டங்களும்,2,408 பிரதேச நிர்வாகிகளின்…
மேலும் படிக்க

EU-ACAP திட்டத்தின் கீழ் தங்கவேலாயுதபுரம் கிராம சாலை கட்டுமானம்

2012.05.09ம் திகதி EU-ACAP திட்டத்தின் கீழ் தங்கவேலாயுதபுரம் கிராம வீதி கட்டுமாணப்பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.  
மேலும் படிக்க

கல்முனை மற்றும் திருக்கோவில் பகுதிகளில் சுயஉதவி குழு பொருட்கள் விற்பனை நிலையம் திறப்பு.

உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும்முகமாக Diakonia திட்டத்தின் கீழ் சுய சார்புக் குழுக்களுடைய உற்பத்திப்பொருட்களின் விற்பனை நிலையமானது கல்முனை, திருக்கோவில் பிரதேசங்களில் 15,16.02.2012ம் திகதி காலை 11.00 மணிக்கு பிரதேச நிர்வாக உத்தியோகத்தர்களின் தலைமையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

11 கிராமங்களில் உள்ள 560 நபர்களுக்கு அத்தியாவசிய ஆவணங்களை வழங்குதல்

இத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கஞ்சிகுடியாறு, தாண்டியடி, வினாயகபுரம் -1,2,3,4, தங்கவேலாயுதபுரம், காஞ்சிடங்குடா, சிறிவள்ளிபுரம், குடிநிலம், சாகாமம் ஆகிய 11 கிராம சேவர் பிரிவுகளில் இருந்தும் தேசிய அடையாள அட்டை, பிறப்பு பதிவு, மரண பதிவு போன்ற ஆவணங்கள் இல்லாதோர் 560பேர் இனங்காணப்பட்டு NRC ஊடாக அவர்களுக்கான ஆவணங்கள் பெற்றுகொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

கிராமங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு தெரு நாடகம்.

EU-ACAP திட்டத்தின் கீழ் தாண்டியடி, சிறிவல்லிபுரம், விநாயகபுரம், குடிநிலம் ஆகிய கிராமங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வூட்டும் பொருட்டு வீதி நாடகம் நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

5 பிராந்தியங்களில் உள்ள 500 விவசாயிகள் விதைகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய வழிகாட்டுதலைப் பெறுகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் 5 பிரதேசத்திலுமுள்ள, 500 விவசாயிகளுக்கு மரக்கறி விதையினங்களும், பழமரக்கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளதோடு விவசாய போதனாசிரியர் ஊடாக அவற்றை நடுவதற்கும் பராமரிப்பதற்குமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேசத்தில் மாதிரி பண்ணை ஆரம்பிக்கப்பட்டது

விவசாயபெறுமதிசேர் மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளிப் பிரதேசத்தில் விவசாய மாதிரிப் பண்ணை ஒன்று அமைக்கப்பட்டு 23.11.2012ம் திகதி திறப்பு விழா மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க

Oxfam ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சாலைகளை சுத்தம் செய்வதில் உதவுகிறது

வெள்ள அனர்த்தகால திண்மக்கழிவகற்றல் செயல் திட்டத்தின் கீழ் Oxfam அமைப்பின் நிதி உதவியுடன் 30,600.00 ரூபாய் செலவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோளாவில் – 01,02,03, நாவற்காடு, ஆலையடிவேம்பு, சின்னக்குளம், பெரியகுளம், வாச்சிக்குடா, இத்தியடி, தீவுக்காலை, பனங்காடு ஆகிய பிரிவுகளில் வீதிகள் தோறும் தேங்கியிருந்த திண்மக்கழிவுகளானது ஆலையடிவேம்பு பிரதேச சபையினூடாக அகற்றி சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது.
மேலும் படிக்க

திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்தல் மற்றும் குளோரினேஷன் செய்தல்.

திருக்கோவில், பொத்துவில் ஆகிய இரு பிரதேசங்களிலும் வெள்ளத்தினால் பாதிப்புக்குட்பட்ட 496 கிணறுகள் துப்பரவு செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், 3052 கிணறுகளுக்கு குளோரின் இடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க