சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

ZOA அமைப்பு திருக்கோவில் பகுதியில் உணவு அல்லாத பொருட்களைக் கொண்ட 1050 குடும்பங்களுக்கு ஆதரவளிக்கிறது

வெள்ள அனர்த்த அவசரகால செயல்திட்ட செயற்பாட்டின் கீழ் ZOA அமைப்பின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 1050 குடும்பங்களுக்கு உணவு அல்லாத பொருட்களும் (Non food relief items), இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப் பட்ட 10 பாடசாலைகளுக்கு பாடசாலையை சுத்தம் செய்வதற்கான பொருட்களும் (School Cleaning tools) வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

சுகாதாரம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகளுடன் நீர் மற்றும் சுகாதார மேம்பாட்டு சவால்கள் பற்றிய காலாண்டு கூட்டம்

பொது சுகாதார முன்னேற்றங்கள் குறித்து சுகாதார திணைக்கள அதிகாரி திருமதி. ளு.ராஜேந்திரா அவர்களைக் கொண்டு 03 Quarterly meeting நடாத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்வழங்கல் வடிகால் திணைக்கள அதிகாரிகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் உள்ளடங்களாக 75 பேர் கலந்து கொண்டு, நீர், பொது சுகாதார அபிவிருத்தியில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் திணைக்கள ரீதியாக ஆராயப்பட்டது.
மேலும் படிக்க

இனக்குழுக்களிடையே ஒற்றுமைக்குள் கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்

மூவின மக்களிடையே சமாதான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் நாவிதன்வெளிப் பிரதேச 4ம் கிராம வாணி மகா வித்தியாலயத்தில் 2009.12.26 திகதி மூவின மக்களையும் உள்ளிணைத்து கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டது
மேலும் படிக்க

நான்கு பிராந்தியங்களில் 1500 பயனாளிகளுக்கு 4500 பழ மரக்கன்றுகள்

CA , NCA ஆகிய நிறுவனங்களின் 420,000.00 ரூபாய் நிதி உதவியுடன் பொத்துவில், திருக்கோவில், சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய நான்கு pரதேசங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 27 கிராமக்கிளைகளின் 1500 பயனாளிகளுக்கு மா, பலா, தென்னை, கொய்யா ஆகிய மரக்கன்றுகள் உள்ளடங்களாக ஒரு பயனாளிக்கு 3 கன்றுகள் வீதம் 4500 பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

3000 பழ மரக்கன்றுகளை வழங்க CA அமைப்பு நிதி விநியோகம்.

2008ம் ஆண்டு CA நிறுவனத்தின் 600,000.00 ரூபாய் நிதி உதவியுடன் 6 செயற்பாட்டுப் பிரதேசத்திலிருந்தும் 10 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் 100 பயனாளிகள் வீதம் 10 கிராமங்களில் இருந்தும் 1000 பயனாளிகளுக்கு கொய்யா, பலா, மா ஆகிய பழமரக்கன்றுகள் 3000 கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

பல கிராமங்களில் 1200 பெறுநர்களுக்கு சுகாதார உதவி வழங்கப்பட்டது

சுகாதார மேம்பாட்டின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட சமூக மீள்புனர்வாழ்வு அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை, நாவிதன்வெளி, கல்முனை ஆகிய பிரதேசங்களில் 1200 பேருக்கு 600,000.00 ரூபாய் செலவில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 500 குடும்பங்களுக்கு 2000 பயன் தரும் மரங்கள் விநியோகம்

2007ம் ஆண்டு சுற்றுச் சூழலை பாதுகாக்கும் முகமாக Dan Church Aid நிதி நிறுவனத்தின் உதவியுடன் பயன்தரக்கூடிய 2000 மரங்கள் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

சர்வதேச முதியோர் தினம் 30.10.2006 அன்று சிறப்பு நிகழ்வுடன் நினைவுகூரப்பட்டது

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்புக் கலாசார மண்டபத்தில் 2006.10.30ம் திகதி முதியோர் தினம் வெகு சிறப்பாக அமைப்பினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் செயற்பாட்டுப் பிரதேசங்களுக்குட்பட்ட முதியோர் 400 பேர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் Help Age நிறுவனம் சார்பாக நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சிறீதர் அவர்களும், திட்ட உத்தியோகத்தர் சம்சுடீன் அவர்களும், அமைப்பின் பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் படிக்க

இலவச மருத்துவ முகாம் வழங்கப்பட்டது.

மருத்துவ முகாம்களின் மூலம் 557 முதியோருக்கு 400 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், 51 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டதோடு, கண்சத்திரசிகிச்சைக்கென இனங்காணப்பட்ட 28 முதியவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க