சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

உட்கட்டமைப்பு அபிவிருத்தி

அம்பாறை மாவட்ட பேண்தகு உட்கட்டுமான மக்கள் மன்றத்தின் 1வது நிருவாகசபையின் கலந்துரையாடல் கூட்டம்

SWOAD நிறுவனம் மற்றும் ASI நிறுவனமும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்ற அம்பாறை மாவட்ட பேண்தகு உட்கட்டுமானத்திற்கான மக்கள் மன்றத்தின் 1வது நிருவாக கூட்டமானது கடந்த 02.01.2024ம் திகதி சுவாட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.எஸ்.செந்துராசா அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று சுவாட் தலைமை அலுவலகத்தில் நடாத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் குறிப்பாக மக்கள் மன்றத்தில் எதிர்கால செயற்பாடுகள், உறுப்பினர்கள் கடமைகள், பொறுப்புக்கள் அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கட்டப்பட்ட உட்கட்டுமானங்களின் பயன்பாடுகள்…
மேலும் படிக்க

நீடித்து நிலைத்திருக்கும் நிர்மாண கட்டமைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலும், மக்கள் மன்றத்தை உருவாக்குதலும்

SWOAD அமைப்பானது பேண்தகு உட்கட்டமைப்புக்கான அணி (ASI) நிறுவனத்தின் நிதி உதவியுடன் அம்பாறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற உட்கட்டுமானப்பணிகள் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களுக்கு சிறந்த நல்வாழ்வை உருவாக்கும் நோக்குடன் வினைத்திறனான சமூக செயற்பாட்டுக் குழுவொன்றை மாவட்ட மட்டத்தில் உருவாக்கி அதனூடாக மக்களின் தேவைகள், விருப்பங்களை கருத்திற் கொண்டு நிர்மாணப்பணிகளின் பொதுபணச் செலவுகள் சரியான முன்னெடுக்கப்படுவதையும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்யும் முகமாக இன்று அதாவது 28.12.2023ம் திகதி…
மேலும் படிக்க

திட்ட விரிவாக்கம் பற்றி விவாதிக்க ASI ஒருங்கிணைப்பாளர் WORD க்கு வருகை தந்தார்

இலங்கையில் நிலையான நிர்மாணக் கட்டமைப்பை உருவாக்கும் அலையன்ஸ் ஃபார் சஸ்டைனபிள் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (ஏஎஸ்ஐ) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.சமந்த அபேவிக்ரம அவர்கள் இன்று 21.11.2023 அன்று SWOAD க்கு விஜயம் செய்து இந்தக் கட்டமைப்பின் விரிவாக்கம் குறித்து விவாதித்தார். இந்நிகழ்வில், SWOAD அமைப்பின் ஸ்தாபகர் திரு.எஸ்.செந்துராசா, நிர்வாக சபை உறுப்பினர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி எஸ்.அனுசியா, திருக்கோவில் வலய ஓய்வுபெற்ற மேலதிக கல்விப் பணிப்பாளர் கே.கமலதேவி, தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்…
மேலும் படிக்க

சாகாமம் பிரதேசத்தில் 240 குடும்பங்களுக்கு குராய் குடிநீர் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

EU-ACAP திட்டத்தின் கீழ் சாகாமம் பிரதேசத்தில் 240 குடும்பங்களுக்கு குலாய் குடிநீர் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

EU-ACAP திட்டத்தின் கீழ் தங்கவேலாயுதபுரம் கிராம சாலை கட்டுமானம்

2012.05.09ம் திகதி EU-ACAP திட்டத்தின் கீழ் தங்கவேலாயுதபுரம் கிராம வீதி கட்டுமாணப்பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.  
மேலும் படிக்க

காவல்துறை மகளிர் மேசை அடிக்கல் நாட்டு விழா மற்றும் விநாயகபுரம் கல்வெட்டு நிகழ்வு

EU-ACAP திட்டத்தின் கீழ் 17.10.2012ம் திகதி திருக்கோவில் பொலிஸ் Women desk அடிக்கல் நாட்டல் நிகழ்வும், வினாயகபுரம் கல்வெட்டு திறப்புவிழாவும் நடைபெற்றது.
மேலும் படிக்க

விவசாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேசத்தில் மாதிரி பண்ணை ஆரம்பிக்கப்பட்டது

விவசாயபெறுமதிசேர் மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளிப் பிரதேசத்தில் விவசாய மாதிரிப் பண்ணை ஒன்று அமைக்கப்பட்டு 23.11.2012ம் திகதி திறப்பு விழா மேற்கொள்ளப்பட்டது.
மேலும் படிக்க

CA அமைப்பு ஆலையடிவேம்பில் 24 பேருக்கும் கல்முனையில் 42 பேருக்கும் தற்காலிக தங்குமிடங்களை அமைத்துள்ளது.

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் CA அமைப்பின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 24 பேருக்கும், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 42 பேருக்கும் தற்காலிக கொட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்டது
மேலும் படிக்க

Oxfam நிதியுதவியுடன் கூடிய அரிசி சேகரிப்பு நிலையம் தம்பத்தை கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது

Oxfam நிறுவனத்தின் நிதி உதவியுடன் தம்பட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டஇந் நெற்களஞ்சிய சாலையானது 2009.01.20ம் திகதி அம்பாறை மாவட்ட அரச அதிபர் திரு சுனில் கன்னங்கரா அவர்கள் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
மேலும் படிக்க

DA அமைப்பு பல்வேறு பகுதிகளில் 10 தண்ணீர் தொட்டிகளுக்கு நிதியளிக்கிறது

DA நிறுவனத்தின் 5,30,000.00 ரூபாய் நிதியுதவியுடன் பொத்துவில் பிரதேசத்தில் 2 நீர் தாங்கிகளும், திருக்கோவில் பிரதேசத்தில் 3 நீர்தாங்கிகளும், நாவிதன்வெளிப் பிரதேசத்தில் 3 நீர்தாங்கிகளும், சம்மாந்துறை பிரதேச வளத்தாப்பிட்டிக் கிராமத்தில் 1, கல்முனை பிரதேச துரவந்தியமேடு கிராமத்தில் 1 தாங்கியுமாக 10 நீர்த்தாங்கிகள் அமைத்து வழங்கப்பட்டன.
மேலும் படிக்க