சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

நீடித்து நிலைத்திருக்கும் நிர்மாண கட்டமைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலும், மக்கள் மன்றத்தை உருவாக்குதலும்

SWOAD அமைப்பானது பேண்தகு உட்கட்டமைப்புக்கான அணி (ASI) நிறுவனத்தின் நிதி உதவியுடன் அம்பாறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற உட்கட்டுமானப்பணிகள் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களுக்கு சிறந்த நல்வாழ்வை உருவாக்கும் நோக்குடன் வினைத்திறனான சமூக செயற்பாட்டுக் குழுவொன்றை மாவட்ட மட்டத்தில் உருவாக்கி அதனூடாக மக்களின் தேவைகள், விருப்பங்களை கருத்திற் கொண்டு நிர்மாணப்பணிகளின் பொதுபணச் செலவுகள் சரியான முன்னெடுக்கப்படுவதையும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்யும் முகமாக இன்று அதாவது 28.12.2023ம் திகதி SWOAD நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
SWOAD நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் SWOAD நிறுவனம் ASI நிறுவனத்திதுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ள செயற்திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து ASI நிறுவனத்தின் முகாமையாளர் திரு.சமந்த விக்கிரம அவர்களும் கலந்து கொண்டு ASI நிறுவனத்தின் பணிகள் தொடர்பான விளக்கத்தினை வழங்கியதுடன் பங்குபற்றுனர்கள் கேள்விகளுக்கும் தனது கருத்துக்களை முன்வைத்தார். மேலும் இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக பேராசியர்கள், சிரேஸ்ட விரிவுரையாளர்கள், கல்வி மான்கள், ஓய்வு பெற்ற அரச அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பல்துறைசார்ந்த அரச அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனத்தலைவர்கள், பிரதேசசபை செயலாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சுவாட் நிறுவனத்தின் முகாமைத்துவசபை உறுப்பினர்கள் என 32பேர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்ததுடன் மேற்குறித்த செயற்பாடுகளை கொண்டு செல்வதற்கு மாவட்ட மட்டத்திலான சமூக செயற்பாட்டு குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. இதன்படி சுவாட் நிறுவனத்தின் சார்பில் நிறுவனத்தின் தலைவி திருமதி.கஐந்தினி சுவேந்திரன் அவர்களும் மக்கள் பிரதிநிதி சார்பாக Dr.எஸ்.அனுசியா (சிரேஸ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப்பல்கலைக்கழம்) அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் இச்சபைக்கான நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இச்செயற்திட்டத்தினை கொண்டு செல்வதற்கான ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

Leave A Comment