சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

நிகழ்வுகள்

திட்டமிடல் கலந்துரையாடல்.

சுவாட் அமைப்பின் திட்டமிடல் கலந்துரையாடலானது 10.06.2026ம் திகதி காலை 9.30 மணிக்கு சுவாட் தலைமைக்காரியாலய பயிற்சி மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அமைப்பினால் கிராம மட்டத்தில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் காணப்படுகின்ற சவால்கள், பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டு அவற்றுக்கான மாற்று நடவடிக்கைகள் மற்றும் உபாயத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. இக்கலந்துரையாடலில் பிரதேச மட்ட மற்றும் தலைமையலுவலக சகல பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

வீட்டுத் தோட்டம் மற்றும் சாகுபடி முறைகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு 27.05.2026

முன்மாதிரிக் கிராமச் செயற்திட்டத்தின் கீழ் சுவாட் சம்மாந்துறை பிரதேச வளத்தாப்பிட்டி கிராமத்தில் கமநல திணைக்கள உத்தியோகத்தர்கள் இவிவசாய போதனாசிரியர்கள் திரு. எம்.எ.எம். ஜனீத்காந்த் (AI) மற்றும் திரு.எம்.வை.எம். நியாஸ் அவர்களைக் கொண்டு வீட்டுத்தோட்டம் மற்றும் பயிர்ச்செய்கை முறைமைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டது. (Multimedia visualization) . இதில் 55 அங்கத்தவர்கள் பங்குபற்றினர்.  
மேலும் படிக்க

கர்ப்பிணிப் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு 22.05.2026

முன்மாதிரிக் கிராமச் செயற்திட்டத்தின் கீழ் சுவாட் காரைதீவு பிரதேசத்தில் இப்பிரதேச முகாமையாளர் மற்றும் களப்பணியாளர்கள் தலைமையில் 22.05.2026ம் திகதி மருத்துவதாதியினைக் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டு அவர்களுக்கான பெண்களுக்கான போசாக்கு உணவு வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் படிக்க

பணியாளர்களுடனான கலந்துரையாடல் 24.04.2026

அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை கிராம மட்டத்தில் செயற்படுத்துவதிலும், மக்களை அணிதிரட்டுவதிலும் காணப்படும் சவால்கள் குறித்தும், அவற்றுக்கான மாற்று உபாயத்திட்டங்கள் குறித்த திட்டமிடல் கலந்துரையாடலானது 24.04.2026ம் திகதி வெள்ளிக்கிழமை சுவாட் தலைமையலுவலகத்தில் அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு. ச.செந்துராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் தலைமையலுவலக பணியாளர்கள் மற்றும் பிரதேச முகாமையாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

வீட்டுத்தோட்டத்திற்கான பயிர்விதைகள் வழங்கல். 24.04.2026

சுவாட் அமைப்பின் ஊடாக அங்கத்தவர் மத்தியில் வீட்டுத்தோட்டத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியான காலப்போக்கில் பயிர்ச்செய்கை ஊடாக தமக்கான உணவுத்தேவையினை வீட்டுத்தோட்டத்தின் ஊடாக மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் சுவாட் அமைப்பின் செயற்பாட்டுப் பிரதேசங்களான பொத்துவில், திருக்கோவில், கல்முனை, காரைதீவு, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 895 அங்கத்தவர்களுக்கு கத்தரி, வெண்டி, பாகல், புடோல், கீரை போன்ற பயிர்விதைகள் வழங்கும் முகமாக இதற்கான…
மேலும் படிக்க

சிறுவர் கழக கூட்டம் 23.04.2026

முன்மாதிரிக் கிராமச் செயற்திட்டத்தின் கீழ் சுவாட் சம்மாந்துறை வளத்தாப்பிட்டி கிராமக் கிளைகளில் 2026.04.23 மாதிரி சிறுவர் கழக கூட்டமானது இடம்பெற்றது .இதில் 18 சிறுவர்கள் பங்கு பற்றினர் .
மேலும் படிக்க

விழிப்புணர்வு நிகழ்ச்சி 22.04.2026

சுவாட் சம்மாந்துறைப் பிரதேச வீரமுனை கிளையில் 22.04.2026ம் திகதி மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எஸ்.நிப்ராஸ் மற்றும் போதைப்பொருள்முட்தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.இக்றாம் அவர்களையும் வளவாளர்களாகக்கொண்டு மனிதவள முகாமைத்துவம் தொடர்பாகவும்இ புதிய தொழில் முயற்சிகள் தொடர்பாகவும் மற்றும் போதைப் பொருள் பாவிப்பதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாகவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.இக்கருத்தரங்கில் 43 அங்கத்தவர்கள் கலந்து கொண்டு இவ்விடயம் குறித்த தகவலினைப் பெற்று பயனடைந்தனர்.
மேலும் படிக்க

குழுத்தலைவி மற்றும் நிர்வாகிகளுடனான மாதாந்த கலந்துரையாடல் 24.03.2026

இன்று 24.03.2026 ந் திகதி பொத்துவில் பிரதேச குழுத்தலைவிகளுக்கான கலந்துரையாடலானது இப்பிரதேச பொறுப்பாளரும், சேமிப்புக் கடன் திட்ட முகாமையாளருமான திருமதி.K.பிரியந்தினி அவர்களின் தலைமையில் சுவாட் பொத்துவில் பிரதேச காரியாலயத்தில் இடம் பெற்றது. இக்கலந்துரையாடலில் பிராந்திய இணைப்பாளர் திரு.S.தனோஜன் அவர்களும் மற்றும் 22 குழுத்தலைவிகளும் , இப்பிரதேச பணியாளர்களும் கலந்துகொண்டனர்
மேலும் படிக்க

வீட்டுத் தோட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு 23.03.2026

இன்று 23.03.2026ம் திகதி சுவாட் அமைப்பினால் கல்முனைப் பிரதேச நற்பிட்டிமுனை -02 கிளையின் முன்மாதிரிக் கிராமச் செயற்பாடாக வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாய போதனாசிரியர் திரு.செந்தூரன் அவர்களை வளதாரியாகக் கொண்டு வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை முறைமை , மற்றும் பராமரிப்பு தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டு 30 பேருக்கு வீட்டுத்தோட்டத்திற்கு தேவையான பயிர்விதைககளும் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் படிக்க

15.05.2025 – Review

சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் பணியாளர்களுடனான கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் பிரதேச முகாமையாளர்கள், பிராந்திய இணைப்பாளர்கள், முகாமைத்துவசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு பிரதேச ரீதியான செயல் முன்னேற்றங்கள், பின்னடைவுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் படிக்க