சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

பேண்தகு வாழ்வாதாரம்

வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் சுயதொழிலுக்கான கடன் உதவி வழங்கல்.

வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 09 அங்கத்தவர்களுக்கு அவர்களின் சுயதொழிலை மேம்படுத்தும் முகமாக சுவாட் அமைப்பினால் கடன் உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது 12.06.2024 ம் திகதி சுவாட் சம்மாந்துறைப் பிரதேச அலுவலகத்தில் இப்பிரதேச முகாமையாளர் செல்வி.S.Jathursha அவர்களின் தலைமையில் இடம் பெற்றதோடு, இந்நிகழ்வில் மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலய அதிபர். திரு. ஆனந்தம் சதானந்தா அவர்கள் பிரமுகராக கலந்துகொண்டு தற்போதைய கால சூழலில் சுய தொழிலின் முக்கியத்துவம்…
மேலும் படிக்க

வெளிநாட்டில் இருந்து திரும்பிய தொழிலாளர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான தொழிற்சாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன

தொழில் வழிகாட்டல் ஆலோசனைக்கூடாக (Occupation Guidance counseling) வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் மற்றும் வெளிநாட்டிலிருந்து மீளத்திரும்பிய தொழிலாளர்கள் 54 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான தொழில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு சுயதொழில் ஒன்றினை மேற்கொள்வதற்கான 25,000.00 ரூபாய் பெருமதியான தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன
மேலும் படிக்க

SWOAD 77,692,778.00 ரூபாயை 632 தொழில்முனைவோருக்கு கடனாக வழங்குகிறது.

மக்கள் சுய தொழிலில் ஈடுபடுவதன் மூலம் வருமானத்தினை அதிகரித்து அவர்களை சுயமாகச் செயற்பட வைப்பதன் ஊடாக தன்னிறைவான மக்கள் சமூகத்தினை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு சுவாட் அமைப்பின் செயற்பாட்டுப் பிரதேசங்களான காரைதீவு, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, திருக்கோவில், பொத்துவில் ஆகிய 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 632 பயனாளிகளிக்கு 77,692,778.00 ரூபாய் நிதியானது சேமிப்புக் கடன் திட்டத்தின் கீழ் வாழ்வாதார தொழில்களை மேற்கொள்வதற்கு கடனாக வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

சாகாமம் பிரதேசத்தில் 240 குடும்பங்களுக்கு குராய் குடிநீர் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

EU-ACAP திட்டத்தின் கீழ் சாகாமம் பிரதேசத்தில் 240 குடும்பங்களுக்கு குலாய் குடிநீர் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

கல்முனை மற்றும் திருக்கோவில் பகுதிகளில் சுயஉதவி குழு பொருட்கள் விற்பனை நிலையம் திறப்பு.

உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும்முகமாக Diakonia திட்டத்தின் கீழ் சுய சார்புக் குழுக்களுடைய உற்பத்திப்பொருட்களின் விற்பனை நிலையமானது கல்முனை, திருக்கோவில் பிரதேசங்களில் 15,16.02.2012ம் திகதி காலை 11.00 மணிக்கு பிரதேச நிர்வாக உத்தியோகத்தர்களின் தலைமையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

5 பிராந்தியங்களில் உள்ள 500 விவசாயிகள் விதைகள், மரக்கன்றுகள் மற்றும் விவசாய வழிகாட்டுதலைப் பெறுகின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் 5 பிரதேசத்திலுமுள்ள, 500 விவசாயிகளுக்கு மரக்கறி விதையினங்களும், பழமரக்கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளதோடு விவசாய போதனாசிரியர் ஊடாக அவற்றை நடுவதற்கும் பராமரிப்பதற்குமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

CA அமைப்பு கல்முனையில் வீட்டுத்தோட்டம் மற்றும் மட்பாண்ட தொழில்துறைக்கு 400,000.00 ரூபாவை வழங்குகிறது.

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் CA அமைப்பின் அனுசரணையுடன் கல்முனை பிரதேசத்தில் இருந்து வீட்டுத் தோட்டத்திற்காக 50 பயனாளிகளும், மட்பாண்ட கைத்தொழிலுக்காக 15 பயனாளிகளும் தொழிலுக்கான உதவித் தொகையாக 400,000.00 ரூபாய் நிதியானது திட்ட உத்தியோகத்தர் அவர்களின் தலைமையில் இப்பிரதேச செயலாளர் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

Oxfam 650 குடும்பங்களுக்கு உணவு அல்லாத பொருட்களையும், 2419 ஹெல்த் பேக்கேஜ்களையும், 1037 வாட்டர் ஃபில்டர்களையும் ஆதரிக்கிறது.

வெள்ள அனர்த்த அவசரகால செயற்திட்டத்தின் கீழ் Oxfam அமைப்பின் நிதி உதவியுடன் ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 650 குடும்பங்களுக்கு உணவு அல்லாத பொருட்களும், 2419 குடும்பங்களுக்கு உடல் சுகாதார மேம்பாட்டிற்கான பொதிகளும், 1037 குடும்பங்களுக்கு தண்ணீர் வடிகட்டி பாத்திரமும் இப்பிரதேச செயலகங்களின் ஊடாக கிராம சேவையாளர் தலைமையில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

திருக்கோவில் மற்றும் விநாயகபுரத்தில் உள்ள விவசாயிகளுக்கு களப் பதிவு பணிகளுக்கு உதவி

வாழ்வாதாரத் திட்டத ;தின் கீழ் திருக்கோவில், பொத்துவில் பிரதேச விவசாயிகள் 116 பேருக்கு பிரதேச செயலாளர் ஊடாக வயல், மேட்டுநிலங்களை பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், SOND நிறுவனத்தின் ஊடாக வினாயகபுரம் 01,02,03,04 கிளைகளிலுள்ள 100 விவசாயிகளுக்கு வீட்டுத்தோட்டத்திற்கான விதையினங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், ரொட்டை-ஹிஜ்ரா கிராமத்தின் 53 விவசாயிகளுக்கு விவசாய திணைக்களத்தின் மூலம் 53 மண்வெட்டிகளும், 40 விவசாயிகளுக்கு கமநல சேவை நிலையங்களினூடாக ஊடாக…
மேலும் படிக்க

வாழ்வாதார உதவித் திட்டத்துக்காக 1774 பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது

2010ம் ஆண்டு வாழ்வாதார உதவித்திட்டத ;தின் கீழ் ஆறு பிரதேசத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 1774 பயனாளிகளிக்கு ரூபா 64,986,000.00 தொகை நிதியானது தொழில்களை மேற்கொள்வதற்காக கடனாக வழங்கப்பட்டுள்ளது.  
மேலும் படிக்க