சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

சுவாட்‌ நிறுவனத்தில்‌ தொழில்‌ வாய்ப்பினை ஏற்படுத்திக்‌ கொடுப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும்‌ நிகழ்வு

  • முகப்பு
  • Funding Partners Tamil
  • WUSC
  • சுவாட்‌ நிறுவனத்தில்‌ தொழில்‌ வாய்ப்பினை ஏற்படுத்திக்‌ கொடுப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும்‌ நிகழ்வு

அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு (SWOAD ) அமைப்பானது கனேடிய உலகப்பல்கலைக்கழக (WUSC ) நிறுவனத்தின்‌ உதவியுடன்‌ அம்பாறை மாவட்டத்தில்‌ இளைஞர்‌. யுவதிகளுக்கு சுற்றுலாத்‌துறையில்‌ உள்ள தொழில்‌ வெற்றிடங்களுக்கு தொழில்‌ பயிற்சி நெறிகளை வழங்கி அதன்‌ ஊடாக (வேலைவாய்ப்பினை சுற்றுலாத்‌ துறைகளில்‌ (Tourism ). பெற்றுக்‌ கொடுக்கும்‌ முகமாக SWOAD நிறுவனம்‌ கனேடிய உலகப்பல்கலைக்கழகம்‌ (WUSC ) மற்றும்‌
அறுகம்பை சுற்றுலாத்துறை சம்மேளனத்துடன்‌ ABTA ஒப்பந்தம்‌ ஒன்றை கைச்சாத்திடும்‌ நிகழ்வு கடந்த 2015-06-24ம்‌ திகதி SWOAD தலைமை அலுவலகம்‌ அக்கரைப்பற்றில்‌ இடம்பெற்றது.

இந்நிகழ்வின்‌ போது சுவாட்‌ நிறுவன தலைவர்‌ திரு.வ.பரமசிங்கம்‌ மற்றும்‌ கனேடி உலகபல்கலைக்கழக நிறுவனத்தின்‌ இலங்கைக்கான உள்ளக பணிப்பாளர்‌ ஓன்செலின்‌ டச்‌ரி (Ms . Angele Touchette ) அவர்கள்‌ மற்றும்‌ அறுகம்பை சுற்றுலா விடுதிகளின்‌ சம்மேளனத்‌ தலைவர்‌ திரு. எம்‌.எச்‌.ஏ.ரகீம்‌ அவர்களினால்‌ 120 இளைஞர்‌, தொழில்வாய்ப்பினைப்‌ பெற்றுக்‌ கொடுப்பதற்கான ஒப்பந்தம்‌ கைச்சாத்திடப்பட்டது.

இந்நிகழ்விற்கு கனேடிய உலகப்பல்கலைக்கழக கிழக்குப்‌ பிராந்தியத்தியத்திற்கால பொறுப்பதிகாரி திரு.எம்‌.யோகேஸ்வரன்‌ அவர்களும்‌, பொத்துவில்‌ பிரதேச செயலகத்தில்‌ உதவித்‌ திட்டமிடல்‌ பணிப்பாளர்‌ A .M Thameem அவர்களும்‌, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின்‌ அபிவிருத்தி இணைப்பாளர்‌ S .L. Anver, தொழில்பயிற்சி அதிகார சபையின்‌ உதவிப்பணிப்பாளர்‌ திரு. வினோதராஜன்‌, NGOs இணைப்பாளர்‌ A .L இர்பான்‌ மற்றும்‌ கனேடிய உலகப்பல்கலைக்கழக நிறுவனத்தின்‌ அம்பாறை மாவட்டத்திற்கான சிரேஸ்ட நிகழ்சிசித்திட்ட உத்தியோகத்தர்‌ திரு. யேசு சகாயம்‌ அவர்களும்‌ மற்றும்‌ அரசசார்பற்ற அமைப்புக்களின்‌ பிரதிநிதிகளும்‌ தொழில்தருனர்களும்‌ கலந்து சிறப்பித்தனர்‌.

Leave A Comment