சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

Funding Partners Tamil

அம்பாறை மாவட்ட பேண்தகு உட்கட்டுமான மக்கள் மன்றத்தின் 1வது நிருவாகசபையின் கலந்துரையாடல் கூட்டம்

SWOAD நிறுவனம் மற்றும் ASI நிறுவனமும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்ற அம்பாறை மாவட்ட பேண்தகு உட்கட்டுமானத்திற்கான மக்கள் மன்றத்தின் 1வது நிருவாக கூட்டமானது கடந்த 02.01.2024ம் திகதி சுவாட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.எஸ்.செந்துராசா அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று சுவாட் தலைமை அலுவலகத்தில் நடாத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் குறிப்பாக மக்கள் மன்றத்தில் எதிர்கால செயற்பாடுகள், உறுப்பினர்கள் கடமைகள், பொறுப்புக்கள் அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கட்டப்பட்ட உட்கட்டுமானங்களின் பயன்பாடுகள்…
மேலும் படிக்க

எதிர்காலத்தில் தொழில் நிமிர்த்தம் வெளிநாடு செல்லவுள்ள மாணவர்களுக்கு HIV/AIDS விழிப்புணர்வு கருத்தரங்கு

SWOAD நிறுவனமானது CDS நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடு செல்லவிருக்கின்ற தொழில் பயிற்சியை தொடர்கின்ற மாணவர்களுக்கு HIV/AIDS தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 16.011.2023ம் திகதி நடாத்தப்பட்டது. இக்கருத்தரங்கானது காரைதீவு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பயிற்சியை தொடர்கின்ற 40மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு கருத்தரங்கை பயிற்சி பெற்ற வளதாரிகளான க.பிறேமலதன் மற்றும் ஆனந்தராசா அவர்களினால் நடாத்தப்பட்டது.
மேலும் படிக்க

HIV/AIDS தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு.

Community Development Services ( CDS ) நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் SWOAD அமைப்பின் ஊடாக புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தலைவர்களுக்கு HIV/AIDS பற்றியும் அதன் தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கானது SWOAD அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகைமையாளர் திரு.க.பிறேமலதன் மற்றும் உதவி திட்ட முகாமையாளர் திரு.ச.ஆனந்தராசா ஆகியோர் இணைந்து இன்று 09.11.2023ம் திகதி வியாழக்கிழமை சுவாட் அக்கரைப்பற்று தலைமையக பயிற்சி மண்டபத்தில் நடாத்தினர். இதில் 32 புலம்பெயர்…
மேலும் படிக்க

சுவாட்‌ நிறுவனத்தில்‌ தொழில்‌ வாய்ப்பினை ஏற்படுத்திக்‌ கொடுப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும்‌ நிகழ்வு

அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு (SWOAD ) அமைப்பானது கனேடிய உலகப்பல்கலைக்கழக (WUSC ) நிறுவனத்தின்‌ உதவியுடன்‌ அம்பாறை மாவட்டத்தில்‌ இளைஞர்‌. யுவதிகளுக்கு சுற்றுலாத்‌துறையில்‌ உள்ள தொழில்‌ வெற்றிடங்களுக்கு தொழில்‌ பயிற்சி நெறிகளை வழங்கி அதன்‌ ஊடாக (வேலைவாய்ப்பினை சுற்றுலாத்‌ துறைகளில்‌ (Tourism ). பெற்றுக்‌ கொடுக்கும்‌ முகமாக SWOAD நிறுவனம்‌ கனேடிய உலகப்பல்கலைக்கழகம்‌ (WUSC ) மற்றும்‌ அறுகம்பை சுற்றுலாத்துறை சம்மேளனத்துடன்‌ ABTA ஒப்பந்தம்‌ ஒன்றை கைச்சாத்திடும்‌ நிகழ்வு…
மேலும் படிக்க

கல்முனை மற்றும் திருக்கோவில் பகுதிகளில் சுயஉதவி குழு பொருட்கள் விற்பனை நிலையம் திறப்பு.

உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும்முகமாக Diakonia திட்டத்தின் கீழ் சுய சார்புக் குழுக்களுடைய உற்பத்திப்பொருட்களின் விற்பனை நிலையமானது கல்முனை, திருக்கோவில் பிரதேசங்களில் 15,16.02.2012ம் திகதி காலை 11.00 மணிக்கு பிரதேச நிர்வாக உத்தியோகத்தர்களின் தலைமையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

WUSC நாட்டின் இயக்குநரின் வருகை

17.10.2012ம் திகதி WUSC Country Director வருகைதந்து இத்திட்ட செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டு மீளாய்வு செய்யப்பட்டது.
மேலும் படிக்க

வீடியோ ஆவணப்படுத்தல் மூலம் இளைஞர்களின் சமூக-நிலை மாற்றங்களைப் படம்பிடித்தல்.

இளையோர் நிலைமாற்றல் செயல்திட்டத்தினால் சமூகமட்ட இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ளமாற்றங்கள் குறித்த 11.05.2011ம் திகதி கொழும்பு WUSC தலைமை அலுவலகத்திலிருந்து Gender Officer வருகைதந்து Video Document மூலம் தகவல்களை பெற்று ஆய்வினை மேற்கொண்டார்.
மேலும் படிக்க

தம்பட்டையில் மறு ஒருங்கிணைப்பு மற்றும் அனுபவப் பரிமாற்றம்.

இளைஞர்களின் நிலைமாற்றல் செயற்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட இளைஞர், யுவதிகள் அனைவரினது மீள் ஒருங்கிணைப்பு நிகழ்வானது அவர்களின் கருத்துப்பரிமாறல்கள், அனுபவப் பகிர்வுகளுடன் 2011/06/05,06ம் திகதி தம்பட்டை சுவாட் பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்டது. இன் நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக இளைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டதுடன், இதில் WUSC, UNICEF, ILO and Save the children பிரதிநிதிகளும், அரச சார்பற்ற ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், இப்பயிற்சியினை நடாத்திய வளவாளர்களும் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்துள்ளனர்.
மேலும் படிக்க

யுத்தம் மற்றும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன் மற்றும் அபிவிருத்திப் பட்டறைகள்.

அம்பாறை மாவட்டத்தில் யுத்தசூழல், அனர்த்தங்களின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளை இலக்காகக் கொண்டு;, இளையோர்களுக்கு வாழ்க்கை தொடர்பான உள்ளுணர்வினை ஏற்படுத்தி, சமூகத்துடன் மீள இணைவதற்கும், கல்வி, பொருளாதாரத்தில் மேம்பாட்டை அடையும் பொருட்டும், தொழில் திறனை விருத்தி செய்து வாழ்க்கைத் தெரிவுகளை திட்டமிட்டு செயற்படுத்தக்கூடிய வகையில் இளைஞர்களிடையே நிலைமாற்றத்தினை ஏற்படுத்தும் பொருட்டு WUSC and UNICEF அமைப்புக்களின் நிதி உதவியுடன் இளைஞர்களின் நிலைமாற்றல் செயற்திட்டத்தின்…
மேலும் படிக்க