சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

அம்பாறை மாவட்ட பேண்தகு உட்கட்டுமான மக்கள் மன்றத்தின் 1வது நிருவாகசபையின் கலந்துரையாடல் கூட்டம்

  • முகப்பு
  • Funding Partners Tamil
  • ASI-ta
  • அம்பாறை மாவட்ட பேண்தகு உட்கட்டுமான மக்கள் மன்றத்தின் 1வது நிருவாகசபையின் கலந்துரையாடல் கூட்டம்
SWOAD நிறுவனம் மற்றும் ASI நிறுவனமும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்ற அம்பாறை மாவட்ட பேண்தகு உட்கட்டுமானத்திற்கான மக்கள் மன்றத்தின் 1வது நிருவாக கூட்டமானது கடந்த 02.01.2024ம் திகதி சுவாட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.எஸ்.செந்துராசா அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று சுவாட் தலைமை அலுவலகத்தில் நடாத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் குறிப்பாக மக்கள் மன்றத்தில் எதிர்கால செயற்பாடுகள், உறுப்பினர்கள் கடமைகள், பொறுப்புக்கள் அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கட்டப்பட்ட உட்கட்டுமானங்களின் பயன்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் அரச நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படவிருக்கின்ற உட்கட்டுமானங்களின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் மக்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் தத்தமது பகுதிகளில் காணப்படுகின்ற உட்கட்டுமானங்களின் உள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

மேலும் இக்கலந்துரையாடலில் ASI நிறுவனத்தின் Convener அவர்களும் கலந்து கொண்டு ASI நிறுவனம் தொடர்பாகவும், சுவாட் நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார். அத்துடன் எதிர்காலத்தில் மக்கள் மன்றத்தின் ஊடாக செயற்படுத்தப்படவிருக்கின்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

Leave A Comment