கல்வி கற்றுவரும் சிறார ;களின் திறன், ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வகையில் கல்முனைப் பிரதேசத்தில் செயற்பட்டு வரும் விவேகானந்தா, கணேசா, கலைமகள் ஆகிய பாலர் பாடசாலை மாணவர்களுக்கிடையே இப் பிரதேச நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் 2009.08.09ம் திகதி கல்முனை மணச்சேனை கிராம விவேகானந்தா பாடசாலையில் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிரதம அதிதிகளாக கணேசா மகாவித்தியாலய அதிபர் திரு.P.ஜெகநாதன், மு.சந்திரலிங்கம் அவர்களும், விவேகானந்தா பாடசாலை ஆசிரியை திருமதி.தபேசன் சிருமணி, அவர்களும் உதவிப்பணிப்பாளர் திருமதி.செல்வராஜா மகாலெட்சுமி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.