சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

Akkaraipattu

சமூக வளர்ச்சியின் முன்னேற்றம் குறித்த வாராந்திர ஆய்வுக் கலந்துரையாடல்

சுவாட் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமூக அபிவிருத்திச் செற்பாடுகள்  மற்றும் குழுக் கட்டமைப்புக்கள் தொடர்பிலான மேம்பாடு குறித்த வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடலானது 10.11.2023ம் திகதி வெள்ளிக் கிழமை காலை 10.15 மணிக்கு ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் Teams செயலியினூடாக சுவாட் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் சுவாட் அமைப்பின் தலைவி திருமதி. கஜேந்தினி சுவேந்திரன் மற்றும் முகாமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

HIV/AIDS தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு.

Community Development Services ( CDS ) நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் SWOAD அமைப்பின் ஊடாக புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தலைவர்களுக்கு HIV/AIDS பற்றியும் அதன் தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கானது SWOAD அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகைமையாளர் திரு.க.பிறேமலதன் மற்றும் உதவி திட்ட முகாமையாளர் திரு.ச.ஆனந்தராசா ஆகியோர் இணைந்து இன்று 09.11.2023ம் திகதி வியாழக்கிழமை சுவாட் அக்கரைப்பற்று தலைமையக பயிற்சி மண்டபத்தில் நடாத்தினர். இதில் 32 புலம்பெயர்…
மேலும் படிக்க

சிறுவர்களுக்கு பாடசாலை சீருடைத்துணி, கற்கை உபகரணங்களடங்கிய பொதிகள் 600 வழங்கப்பட்டது.

சிவசரிட்டி (Sivacharity) நிறுவனத்தின் 8 இலட்சம் ரூபா செலவில் 5 முன்பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர் பாதுகாப்பு இலங்கை அமைப்பின் ; (SCiSL) 70,000.00 ரூபா செலவில் 3 தற்காலிக பாலர் பாடசாலைகள் திருக்கோவில், காரைதீவுப் பிரதேசங்களிலும், GVCஅமைப்பினால் கல்முனைப் பிரதேசத்தில் 2 பாலர் பாடசாலைகளும், உலக கனேடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனத்தின் 275,000.00 ரூபா செலவில் 8 பாலர் பாடசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. CIDA – Fit நிறுவனம் நலன்புரி நிலையங்களிலுள்ள…
மேலும் படிக்க