சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

நிகழ்ச்சித் திட்டங்கள்

எதிர்காலத்தில் தொழில் நிமிர்த்தம் வெளிநாடு செல்லவுள்ள மாணவர்களுக்கு HIV/AIDS விழிப்புணர்வு கருத்தரங்கு

SWOAD நிறுவனமானது CDS நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடு செல்லவிருக்கின்ற தொழில் பயிற்சியை தொடர்கின்ற மாணவர்களுக்கு HIV/AIDS தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 16.011.2023ம் திகதி நடாத்தப்பட்டது. இக்கருத்தரங்கானது காரைதீவு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழில் பயிற்சியை தொடர்கின்ற 40மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு கருத்தரங்கை பயிற்சி பெற்ற வளதாரிகளான க.பிறேமலதன் மற்றும் ஆனந்தராசா அவர்களினால் நடாத்தப்பட்டது.
மேலும் படிக்க

HIV/AIDS தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு.

Community Development Services ( CDS ) நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் SWOAD அமைப்பின் ஊடாக புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தலைவர்களுக்கு HIV/AIDS பற்றியும் அதன் தொற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வுக் கருத்தரங்கானது SWOAD அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகைமையாளர் திரு.க.பிறேமலதன் மற்றும் உதவி திட்ட முகாமையாளர் திரு.ச.ஆனந்தராசா ஆகியோர் இணைந்து இன்று 09.11.2023ம் திகதி வியாழக்கிழமை சுவாட் அக்கரைப்பற்று தலைமையக பயிற்சி மண்டபத்தில் நடாத்தினர். இதில் 32 புலம்பெயர்…
மேலும் படிக்க

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் 3 மீளாய்வுக் கலந்துரையாடல்கள்

இத்திட்டத்தின் ஊடாக திட்ட செயற்பாட்டு பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர் நலன்புரிச்சங்கங்களின் நோக்கம் குறித்தும், இச்சங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை தெளிவுபடுத்தி எதிர்வரும் காலங்களில் இச் சங்கங ;களுடன் இணைந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்எவ்வாறு செயலாற்றுவது சேவையினை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்துவது, இதிலுள்ள சாதக,பாதகங்கள் குறித்தும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் 3 மீளாய்வுக் கலந்துரையாடல்கள் DOFE Coordinator A.M.Farzan…
மேலும் படிக்க

பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு தகவல்கள் குறித்த விழிப்புணர்வு

பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு தகவல்கள் குறித்தவிழிப்புணர்வை கிராம மக்களுக்கு வழங்கும் நோக்கில்இத்திட்டச் செயற்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 105 தொண்டர்களுக்கு அவர்களுக்குத் தேவையான 4 நாள் கொண்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

வெளிநாட்டில் இருந்து திரும்பிய தொழிலாளர்களுக்கு சுயதொழில் செய்வதற்கான தொழிற்சாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன

தொழில் வழிகாட்டல் ஆலோசனைக்கூடாக (Occupation Guidance counseling) வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் மற்றும் வெளிநாட்டிலிருந்து மீளத்திரும்பிய தொழிலாளர்கள் 54 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான தொழில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு சுயதொழில் ஒன்றினை மேற்கொள்வதற்கான 25,000.00 ரூபாய் பெருமதியான தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன
மேலும் படிக்க

வெளிநாட்டில் தொழில் திறன் மற்றும் வாய்ப்புகளைத் தேடும் குடும்பங்களுக்கான பயிற்சி

தொழில்திறன்களைப் பெற்று வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து மீளத்திரும்பிய தொழிலாளர்களுக்கு தொழில் திறன்கள் தொடர்பான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கும் நோக்குடன் தொழில்திறன் அபிவிருத்தி செயல்திட்டத்தின் கீழ் தொழில்துறை பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பதாரிகளில் பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான Pre Counseling ஆனது 395 பேருக்கு மேற்கொள்ளப்பட்டு இதில் 255 பேர் பொருத்தமான பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு இவர்களில் 119 பேர் பயிற்சிக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். 
மேலும் படிக்க

அரச தொழில் பயிற்சி ஆலோசகர்கள், மற்றும்தொடர்புடைய பங்குதாரர்கள், திட்ட பணியாளர்களுடனான கலந்துரையாடல்

இத்திட்டச் செயற்பாடுகள் குறித்து அரச தொழில் பயிற்சி ஆலோசகர்கள், மற்றும்தொடர்புடைய பங்குதாரர்கள், திட்ட பணியாளர்களுடனான 4 கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு இதில் அவர்களது பங்கேற்புடனான செயற்பாடுகள் குறித்த தகவல் வழங்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டு இத்திட்டச்செயற்பாட்டில் அவர்களது பங்களிப்புக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன
மேலும் படிக்க

தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்முறைகள் பற்றிய உணர்வூட்டல் விவாதம்

தொழில் திறன் அபிவிருத்தி செயற்திட்டத்தின் செயல்முறைகள் குறித்து உணர்வூட்டல் கலந்துரையாடலானது (ளுநளெவைணைiபெ) கிராமிய மட்ட அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் கிராம மட்ட அரச அதிகாரிகள் 551 பேரை உள்ளிணைத்து 17 கலந்துரையாடல்களும்,தொண்டர்கள் 90பேரை உள்ளிணைத்து 3 கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டுள்ளன
மேலும் படிக்க

11 பிரிவுகளில் 275 அதிகாரிகளுக்கான தொழில்முறை திறன் மேம்பாட்டுத் திட்டம்.

தொழில் திறன் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து இத்திட்டத்துடன் தொடர்புடைய 275 அரச திகாரிகளை உள்ளிணைத்து 11 திட்டவிளக்கக் கலந்துரையாடலானது நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

“ போதைப்பொருள் பாவனையும் அதனால் ஏற்படக்கூடிய தீமைகளும்” தொடர்பான விழிப்புணர்வு.

20.08.2019ம் திகதி பொத்துவில் பிரதேசத்தில் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ஆ.ஆ.சுக்கூர் அவர்களைக் கொண்டு போதைப்பொருள் பாவனையும் அதனால் ஏற்படக்கூடிய தீமைகளும் தொடர்பாக 33 பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க