சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

கல்வி அபிவிருத்தி

திருக்கோவில் முன்பள்ளி மாணவர்களுக்கான கூட்டு விளையாட்டு நிகழ்வு

ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் கூட்டு முயற்சியாக, திருக்கோவில் பகுதியில் உள்ள SWOAD அமைப்பின் ஏழு முன்பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த ஈர்க்கும் நிகழ்வு மார்ச் 27, 2019 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு தம்பட்டை லெவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச முகாமையாளர் திருமதி இ.சம்பவிலோஜினி அவர்களின் திறமையான தலைமைத்துவத்தின் கீழ், இளம் மாணவர்களிடையே தோழமை மற்றும் உடல் செயல்பாடுகளை…
மேலும் படிக்க

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளன.

தொழில் பயிற்சி வழங்கல் செயல் திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு, திருக்கோவில், கல்முனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 105 இளைஞர், யுவதிகளுக்கு ODW/UNICEF ஆகிய நிறுவனங்களின் அணுசரனையுடன் அழகுக்கலை, மின்னினைப்பு, தையல், சாரதி, குளிரூட்டி திருத்துனர் பயிற்சி போன்ற தொழில் பயிற்சிகள் நடாத்தப்பட்டதோடு, பயிற்சிகளை முடித்துக்கொண்ட பயிலுனர்களுக்கான NVQ தரத்திலான சான்றிதழ்களும், தொழிலை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

ZOA அமைப்பு திருக்கோவில் பகுதியில் உணவு அல்லாத பொருட்களைக் கொண்ட 1050 குடும்பங்களுக்கு ஆதரவளிக்கிறது

வெள்ள அனர்த்த அவசரகால செயல்திட்ட செயற்பாட்டின் கீழ் ZOA அமைப்பின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 1050 குடும்பங்களுக்கு உணவு அல்லாத பொருட்களும் (Non food relief items), இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப் பட்ட 10 பாடசாலைகளுக்கு பாடசாலையை சுத்தம் செய்வதற்கான பொருட்களும் (School Cleaning tools) வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

கிழக்குப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் 11 பல்கலைக்கழக மாணவர்களுக்கு 93,250.00 ரூபாவை வழங்கினோம்.

கல்வியினை மேன்படுத்தும் நோக்கில் கல்வி உபகார நிதி வழங்கல் செயல் திட்டத்தின்கீழ் பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு ஆகிய 7 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தெரிவு நிபந்தனையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக, கா.பொ.த. உயர்தர மாணவர்கள் 11 பேருக்கு கல்வி உபகார நிதியாக இவ்வருடம் 93,250.00 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

கல்முனை மணச்சேனை கிராம பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள்

கல்வி கற்றுவரும் சிறார ;களின் திறன், ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வகையில் கல்முனைப் பிரதேசத்தில் செயற்பட்டு வரும் விவேகானந்தா, கணேசா, கலைமகள் ஆகிய பாலர் பாடசாலை மாணவர்களுக்கிடையே இப் பிரதேச நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் 2009.08.09ம் திகதி கல்முனை மணச்சேனை கிராம விவேகானந்தா பாடசாலையில் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிரதம அதிதிகளாக கணேசா மகாவித்தியாலய அதிபர் திரு.P.ஜெகநாதன், மு.சந்திரலிங்கம் அவர்களும், விவேகானந்தா பாடசாலை ஆசிரியை…
மேலும் படிக்க