சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

வாய்ப்பை பயன்படுத்தி சுயதொழிலில் முன்னேறியமை

இன்ஸ்பெக்டர் ஏத்தத்தை சேர்ந்த சிற்றம்பலம் செல்லம்மா என்பவருக்கு 5பிள்ளைகள் அதில் 3வது மகளாக பிறந்தவர். தான் மஞ்சுளா இவர்கள் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை கூலிவேலை செய்தே குடும்பத்தை நடாத்தி வந்தார். சிறிது காலத்தின் பின் 90ம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக இவரது தந்தை மற்றும் சகோதரர் காணாமல் போயுள்ளார்கள். இது இவர்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பாக காணப்பட்டது. அதன் பின்பு இவரது தாயார் கூலி வேலை செய்து நான்கு பிள்ளைகளையும் வளர்த்து வந்துள்ளதுடன் நான்கு பிள்ளைகளையும் கல்விப் பொது சாதாரணதரம் வரைக்கும் படிக்க வைத்துள்ளார். நன்கு கல்வி கற்கக்கூடிய திறமை இருந்தும் பிள்ளைகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வசதி இல்லாத காரணத்தினால் கல்வியை இடை நிறுத்தப்பட்டது.
பின்னர் மஞ்சுளாவின் ஏனைய சகோதரிகள் திருமணம் செய்து கொண்டனர்கள்;. தனது குடும்ப நிலைமையை அறிந்த மஞ்சுளா பல கனவுகளை மறந்து அவரும் 19வது வயதில் திருமணம் செய்து கொண்டாள். இவரது கணவர் ரவிச்சந்திரன் இவரும் கூலிவேலை செய்பவர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தது. இவ்வாறான நிலையில் தனது கஸ்டத்திற்கு மத்தியிலும் தான் பட்ட கஸ்டம் தனது குழந்தைகள் படக்கூடாதெனவும் தனது பிள்ளைகளை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என நினைப்புடன். வருமானம் இல்லாமல், தொழில் இல்லாமல் .பல சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரலானாள். இவ்வாறான நிலையில் கணவருடைய வருமானம் சாப்பாடிற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.
சிறிது காலத்தின் பினனர்.
1. திருமதி மஞ்சுளா சுவாட் அமைப்பு பற்றிய தகவல் அறிந்து கொண்டார்.
2. பின்பு 2009.05.31 அன்று சுவாட் அமைப்பில் அங்கத்தவராக இணைந்தார்.
3. அத்துடன் நல்லமுறையில் குழுவையும் நடாத்தி சென்றார் அதன் விளைவாக மஞ்சுளாவை குழுத்தலைவியாக அங்கத்தவர்களால் காலப்பேர்ககில் நியமிக்கப்பட்டாள்
4. அதன் பின்பு இவரது நிலைமை அறியப்பட்டு அமைப்பினால் இவருக்கு சுயதொழில் செய்வதற்கான உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு சுயதொழிலுக்காக இவருக்கு மிளகாய் அரைக்கும் இயந்திரம் ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது.
5. மிளகாய் அரைக்கும் இயந்திரம் கிடைக்கப்பெற்றதும் அதன் மூலம் வருமானத்தை ஈட்டிவந்தார்
6. மேலும் வருமானத்தை அதிகரிக்க அமைப்பிடம் 2011.03.23 அன்று ரூபா 40,000.00 கடன்பெற்று கோழிவளர்பை மேற்கொண்டார். அதன் மூலமும் வருமானத்தை ஈட்டலானார். இதனால்; இவர்களது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.

 

மேலும் இவ்வருமானத்தைக் கொண்டு பிள்ளைகளை எவ்வாறு நல்ல முறையில் படிப்பிப்பது. சிக்கனமாக குடும்பத்து செலவை எவ்வாறு செய்வது என்ற குழப்பத்தில்; இருந்த போது. சுவாட் அமைப்பின் இணைப்பாளர் திரு.செந்துராஜா ஐயா அவர்களால் நடாத்தப்படும் கலந்துரையாடலில் குழுத்தலைவர் என்ற முறையில்; திருமதி மஞ்சுளாவும் பங்குபற்றினார். இணைப்பாளர் வழங்கிய கருத்துக்களை கற்றுக்கொண்ட அவர் தனது பிள்ளைகளை பட்டம் பெற வைப்பது. மற்றும் தான் சமூகசெயற்பாடுகளில் ஈடுபடுதல் போன்ற எண்ணங்களை மனதிற் நிறுத்திக்கொண்டு தொழிலையும், குழுவையும் மற்றும் தனது பிள்ளைகளின் படிப்பையும் கவனித்து வந்தார். தான் அமைப்பில் ஒவ்பொரு கடனும் பெறமுன்பும் இணைப்பாளர் கூறிய கருத்துக்களை கவனத்தில் கொண்டே செயற்படுவதாகவும் கூறினார்.
தற்போது மிளகாய் அரைத்தல், மா அரைத்தல். கோழி வளர்ப்பு, மாடுவளர்ப்பு, கல்வெட்டி விற்பனை செய்தல் போன்ற பல சுயதொழில்களை செய்து வருவதுடன் .இத்தொழில்களின் மூலம் மாதமொன்றிற்கு 200,000.00 வருமானமத்திற்கும் மேற்பட்ட வருமானத்தை ஈட்டிவருவதாகவும்;. அதுமட்டுமன்றி தான் தற்கொழுது மிளகாய் இயந்திரத்துடன் அதில் கிடைத்த வருமானம் மூலம் தான் தற்பொழுது மா அரைக்கும் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்து அதனையும் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும்
தற்பொழுது தான் நினைத்ததைப்போல் தனது மூன்று பிள்ளைகளில் இரண்டு பிள்ளைகள் பல்கலைக்கழகம் கற்பதாகவும். ஒருவர் தற்பொழுது உயர்தரம் கற்று வருவதாகவும் இவை தனது முயற்சிக்கு கிடைத்த வெற்றி எனறும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

Leave A Comment