சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் பணியாளர்களுடனான கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் பிரதேச முகாமையாளர்கள், பிராந்திய இணைப்பாளர்கள், முகாமைத்துவசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு பிரதேச ரீதியான செயல் முன்னேற்றங்கள், பின்னடைவுகள் குறித்து ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.