சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

SWOAD

சேமிப்புக் கடன் திட்டத்திற்கான New System தொடர்பான கலந்துரையாடல்

சேமிப்புக் கடன் திட்டத்திற்கான New System தொடர்பான கலந்துரையாடலானது 18.01.2024ம் திகதி சுவாட் தலைமைக்காரியாலயத்தில் தலைவி.திருமதி கஜேந்தினி சுவேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் SYSCGAA – Founder Mr.K.Barathan மற்றும் சுவாட் அமைப்பின் முகாமைத்துவசபை உறுப்பினர்களும், சேமிப்புக்கடன் திட்ட பணியாளர்களும், Teams செயலினூடாக பிரதேச முகாமையாளர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

அம்பாறை மாவட்ட பேண்தகு உட்கட்டுமான மக்கள் மன்றத்தின் 1வது நிருவாகசபையின் கலந்துரையாடல் கூட்டம்

SWOAD நிறுவனம் மற்றும் ASI நிறுவனமும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்ற அம்பாறை மாவட்ட பேண்தகு உட்கட்டுமானத்திற்கான மக்கள் மன்றத்தின் 1வது நிருவாக கூட்டமானது கடந்த 02.01.2024ம் திகதி சுவாட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.எஸ்.செந்துராசா அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று சுவாட் தலைமை அலுவலகத்தில் நடாத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் குறிப்பாக மக்கள் மன்றத்தில் எதிர்கால செயற்பாடுகள், உறுப்பினர்கள் கடமைகள், பொறுப்புக்கள் அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கட்டப்பட்ட உட்கட்டுமானங்களின் பயன்பாடுகள்…
மேலும் படிக்க

2024ம் ஆண்டிற்கான புதுவருட நிகழ்வு

2024ம் ஆண்டிற்கான புதுவருட நிகழ்வானது ஸ்தாபகர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் ஆலையடிவேம்பு ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலைய பிரார்த்தனைக்கூடான இறை ஆசியுடனும் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2024ம் ஆண்டிற்கான செயற்பாடுகள் குறித்தும், இதில் சகல மட்ட பணியாளர்களின் ஒத்துளைப்புக்கள், பங்களிப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் சகல பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

2024ம் ஆண்டிற்கான செயற்பாடுகள் குறித்த திட்டமிடல் கலந்துரையாடல்

2024ம் ஆண்டிற்கான செயற்பாடுகள் குறித்த திட்டமிடல் கலந்துரையாடலானது ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் 29.12.2023ம் திகதி சுவாட் தலைமைக் காரியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் முகாமைத்துவசபை உறுப்பினர்கள் , பிராந்திய இணைப்பாளர்கள் , பிரதேச முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
மேலும் படிக்க

நீடித்து நிலைத்திருக்கும் நிர்மாண கட்டமைப்பு தொடர்பான மாவட்ட மட்ட கலந்துரையாடலும், மக்கள் மன்றத்தை உருவாக்குதலும்

SWOAD அமைப்பானது பேண்தகு உட்கட்டமைப்புக்கான அணி (ASI) நிறுவனத்தின் நிதி உதவியுடன் அம்பாறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற உட்கட்டுமானப்பணிகள் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களுக்கு சிறந்த நல்வாழ்வை உருவாக்கும் நோக்குடன் வினைத்திறனான சமூக செயற்பாட்டுக் குழுவொன்றை மாவட்ட மட்டத்தில் உருவாக்கி அதனூடாக மக்களின் தேவைகள், விருப்பங்களை கருத்திற் கொண்டு நிர்மாணப்பணிகளின் பொதுபணச் செலவுகள் சரியான முன்னெடுக்கப்படுவதையும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்யும் முகமாக இன்று அதாவது 28.12.2023ம் திகதி…
மேலும் படிக்க

வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடல் – 22.12.2023

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கள மட்டச் செயற்பாட்டு முன்னேற்றங்கள் குறித்த வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடலானது இன்று 22.12.2023ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் முகாமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள், பிரதேச முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் 2023

18.12.2023 ம் திகதி VOM (Voice of Migration) ஏற்பாட்டில் கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் புலம்பெயர் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் விசேட அதிதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ Manusha Nanayakkara மற்றும் SDC, Helvetas, Solitaries போன்ற நிதி நிறுவன பிரதிநிதிகளும், ஏனைய சிவில் அமைப்புக்களும் பங்குபற்றியிருந்தனர். இதில் சுவாட் அமைப்பின் சார்பில் திரு.ச. ஆனந்தராசா மற்றும் சம்மாந்துறை, இறக்காமம் புலம்பெயர் சங்கத்தலைவிகளும் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் படிக்க

வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடல் – 15.12.2023

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கள மட்டச் செயற்பாட்டு முன்னேற்றங்கள் குறித்தும், Task அடிப்படையிலான முன்னேற்றம் குறித்தும் வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடலானது இன்று 15.12.2023ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சுவாட் அமைப்பின் தலைவி திருமதி. கஜேந்தினி சுவேந்தினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் முகாமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள், பிரதேச முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு இம்மாத இரண்டாம் வாரத்திற்கான செயற்பாட்டு முன்னேற்றங்கள் குறித்து சமர்ப்பணம் செய்தனர்.
மேலும் படிக்க

வாய்ப்பை பயன்படுத்தி சுயதொழிலில் முன்னேறியமை

இன்ஸ்பெக்டர் ஏத்தத்தை சேர்ந்த சிற்றம்பலம் செல்லம்மா என்பவருக்கு 5பிள்ளைகள் அதில் 3வது மகளாக பிறந்தவர். தான் மஞ்சுளா இவர்கள் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை கூலிவேலை செய்தே குடும்பத்தை நடாத்தி வந்தார். சிறிது காலத்தின் பின் 90ம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக இவரது தந்தை மற்றும் சகோதரர் காணாமல் போயுள்ளார்கள். இது இவர்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பாக காணப்பட்டது. அதன் பின்பு இவரது தாயார் கூலி வேலை செய்து…
மேலும் படிக்க